எரிபொருள் வரியைகுறைக்க முடியாது !ஜனாதிபதி அநுர திட்டவட்டம்
எரிபொருள் மீது விதிக்கப்பட்டுள்ள வரியைக் குறைக்க முடியாது என ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்க தெரிவித்துள்ளார்.
பேருவளைப் பகுதியில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
‘ கனிய வளக் கூட்டுத்தாபனம் 3 பில்லியன் டொலர் கடனில் இயங்குகிறது.
அந்த கடன் அனைத்தையும் திறைசேரி பொறுப்பேற்றுள்ளது.
விற்பனை செய்யப்படும் ஒவ்வொரு லீற்றர் எரிபொருளுக்கும் கடனைச் செலுத்துவதற்கான கட்டணம் அறவிடப்படுகிறது.
கடன் செலுத்தி முடித்த பின்னரே எரிபொருள் மீது விதிக்
கப்பட்டுள்ள வரியைக் குறைக்க முடியும் ‘என ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்க தெரிவித்துள்ளார்.