தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தையும் விரைவில் க்ளீன் செய்ய வேண்டிவரும்
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தையும் விரைவில் க்ளீன் செய்ய வேண்டிவரும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், ”ஊடக சுதந்திரம் இந்நாட்டுக்கு மிக அவசியம். நல்லாட்சியின்போது ஊடகங்கள் அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்தன. அப்போதுகூட நாம் ஊடக சுதந்திரத்தை பாதுகாத்தோம். ஆனால் தற்போதைய ஆட்சியின்கீழ் ஊடகங்கள் அச்சுறுத்தப்படுகின்றன. இதனை நாம் எதிர்க்கின்றோம்.
நாடாளுமன்றத்தில் இருந்து கூட்டுறவுசபைவரை எல்லாம் தற்போது க்ளீன் செய்யப்பட்டுவருகின்றது. நாடாளுமன்றத்தில் சபாநாயகர் க்ளீன் செய்யப்பட்டார். கூட்டுறவு தேர்தல்களில் ஆளுங்கட்சி தோல்வி அடைந்துவருகின்றது. ஏனெனில் குறுகிய காலப்பகுதிக்குள் இந்த அரசாங்கத்தைப் பற்றி மக்கள் புரிந்துகொண்டுள்ளனர்.” என தெரிவித்துள்ளார்.