விஜித் விஜேமுனி சொய்சா இன்று நீதிமன்றில் முன்னிலை !
சட்ட விரோதமான முறையில் ஒன்று சேர்க்கப்பட்ட வாகனமொன்றை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதான முன்னாள் அமைச்சர் விஜித் விஜேமுனி சொய்சா இன்று பண்டாரவளை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் அவர் வலான மத்திய ஊழல் தடுப்பு பிரிவினரால் நேற்று கைது செய்யப்பட்டார்.
சுமார் ஆறு மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கிய பின்னர் அவர் அந்த பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சட்டவிரோதமாக ஒன்று சேர்க்கப்பட்டதாகக் கூறப்படும் குறித்த வாகனம் கடந்த மாதம் ஐந்தாம் திகதி ஹப்புத்தளை பகுதியில் வைத்து கைப்பற்றப்பட்டது.