அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் விரைவில் புதிய வாகனங்கள் வழங்கப்படும்

அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் விரைவில் புதிய வாகனங்கள் வழங்கப்படும்

அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் விரைவில் புதிய வாகனங்கள் வழங்கப்படும் என தேசிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தர்மப்பிரிய திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

“அனைத்து எம்.பி.க்களும் புதிய வாகனத்தைப் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். இதுவரை எம்.பி.க்களுக்கு வாகனங்கள் எதுவும் வழங்கப்படவில்லை. ஒரு அமைச்சருக்கோ அல்லது பாராளுமன்ற உறுப்பினருக்கோ தமது கடமைகளை நிறைவேற்றுவதற்கு வாகனம் தேவை – அதனை நாங்கள் மறுக்க முடியாது,” என வடமேல் மாகாண இயந்திரவியல் மற்றும் உபகரண அதிகார சபையின் குருநாகல் கிளைக்கு ஆய்வுச் சுற்றுப்பயணம் செய்த போது ஊடகவியலாளர்களிடம் பேசுகையில் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் , “எம்.பி.க்களுக்கு வாகனங்கள் வழங்குவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது, ஆனால் எந்த ரக வாகனங்கள் என முடிவு செய்யப்படவில்லை என்றாலும், அவை நிச்சயமாக புதியதாக இருக்கும், அடுத்த இரண்டு மாதங்களுக்குள் வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில், சேதமடைந்த வாகனங்களை இந்த இடத்தில் நிறுத்துமாறு நிறுவனங்களின் தலைவர்கள் அறிவுறுத்தியதாக எமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.

அரசு நிறுவனங்களிடம் இருந்து இந்த அதிகார சபைக்கு போதிய ஆதரவு இல்லை. பல வாகனங்கள் வேறு இடங்களில் பழுது பார்க்கப்படுகிறன. எதிர்காலத்தில் அனைத்து அரசு வாகனங்களும் இங்கு பழுது பார்க்கப்படுவதை உறுதி செய்ய திட்டமிட்டுள்ளோம்” என தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )