ஈரானில் சுட்டுக்கொல்லப்பட்ட நீதியரசர்கள்
ஈரானிய உயர்நீதிமன்றத்தின் மூத்த நீதியரசர்கள் இருவர் தலைநகர் தெஹ்ரானில் சுட்டுக் கொல்லப்பட்டதாக ஈரானின் நீதித்துறை தெரிவித்துள்ளது.
இந்தத் துப்பாக்கிச் சூட்டில் நீதிபதிகளான மொஹிசா, அலி ரசானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும், இந்த தாக்குதலில் நீதிபதிகளின் பாதுகாவலரும் படுகாயமடைந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடத்திய நபரும் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
படுகொலைக்கான நோக்கம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை .
எனினும், குறித்த இரண்டு நீதியரசர்களும், நீண்ட காலமாக உளவு பார்த்தல் மற்றும் பயங்கரவாதம் உள்ளிட்ட தேசிய பாதுகாப்பு வழக்குகளை விசாரணை செய்து வந்துள்ளனர்.
இது எதிரிகளிடையே கோபத்தையும் வெறுப்பையும் தூண்டியுள்ளதன் அடிப்படையிலேயே அவர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று அரச அதிகாரி ஒருவர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஈரான் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.