சவுதி அரேபிய தூதுவர் மற்றும் ஐரோப்பிய சங்கத்தின்  தேர்தல் கண்காணிப்பு செயற்பாட்டின் பிரதான கண்காணிப்பாளர் பிரதமருடன் சந்திப்பு

சவுதி அரேபிய தூதுவர் மற்றும் ஐரோப்பிய சங்கத்தின் தேர்தல் கண்காணிப்பு செயற்பாட்டின் பிரதான கண்காணிப்பாளர் பிரதமருடன் சந்திப்பு

இலங்கைக்கான சவுதி அரேபிய தூதுவர் Khalid Hamoud Nasser Alkahtani மற்றும் ஐரோப்பிய சங்கத்தின் (EU) தேர்தல் கண்காணிப்பு செயற்பாட்டின் பிரதான கண்காணிப்பாளரும் ஐரோப்பிய பாராளுமன்றத்தின் உறுப்பினருமானJosé Ignacio Sánchez Amor அவர்கள் ஜனவரி 16ம் திகதி பிரதமர் அலுவலக்தில் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியை சந்தித்தனர்.

அரசாங்கத்தின் அடிப்படை இலக்கு, முதல் இரு வருடங்களில் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவது என பிரதமர் இதன்போது தெரிவித்தார். இந்த சந்திப்பில் நாட்டின் வர்த்தகம், சுற்றுலா, நிர்வாகம் உள்ளிட்ட பல துறைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.

குறித்த சந்திப்பில் இலங்கைக்கான ஐரோப்பிய சங்கத்தின் தூதுவர் Carmen Moreno, இலங்கைக்கு வருகை தந்துள்ள ஐரோப்பிய சங்கத்தின் பிரதிநிதிகள் குழுவின் அங்கத்துவ பிரதானி Sánchez Amor உள்ளிட்ட அதிகாரிகளும், வெளிவிவகார அமைச்சு மற்றும் பிரதமர் அலுவலகத்தின் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )