🛑 Breaking News : மின்சாரக் கட்டணங்கள் 20 வீதம் குறைப்பு
மின்சார கட்டண திருத்தம் தொடர்பான இறுதி அறிக்கையை இன்று (17) வெளியிட இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் மின்சாரக் கட்டணங்கள் 20 வீதம் குறைக்கப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதன்படி, முதல் ஆறு மாதங்களுக்கு புதிய கட்டண திருத்ததின் கீழ், கட்டண திருத்தம் மேற்கொள்ளப்படும் என தொடர்பாடல் பிரிவு பணிப்பாளர் ஜயனாத் ஹேரத் தெரிவித்துள்ளார்.