மட்டக்களப்பு கடலில் கரை ஒதுங்கியுள்ள மர்ம பொருள்
மட்டக்களப்பு மாவட்டம் களுதாவளைக் கடற்கரையில் மர்மப் பொருள் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது.
இன்று (17) அதிகாலை வேளையில் கடற்கரைக்குச் சென்ற மீனவர்கள் தாம் இதுவரையில் அறிந்திராத மர்மப் பொருள் ஒன்று கரை ஒதுங்கியுள்ளதை அவதானித்துள்ளதாகவும், பின்னர் அதனைக் கரைசேர்த்து வைத்துள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
இரும்பு உலோகத்தில் இந்த பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பொருளின் கீழ் பகுதியில் 12 LM எனும் எழுத்துக்களும் காணப்படுகின்றன.
இது பெரியதொரு கப்பலின் பாகமாக இருக்கலாம் என மீனவர்கள் சந்தேகிப்பதோடு ,இவ்வாறு மர்மப் பொருள் கரை ஒதுங்கியுள்ளமை தொடர்பில் கடற்படைக்கு தாம் அறிவித்துள்ளதாகவும் கூறுகின்றனர்
CATEGORIES Sri Lanka