மின்கட்டண திருத்தம் தொடர்பான இறுதி தீர்மானம் இன்று!
2025ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களுக்கான மின்கட்டண திருத்தம் தொடர்பான இறுதி தீர்மானம் இன்றைய தினம் அறிவிக்கப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்த முறை திருத்தமின்றி தற்போதைய அளவிலேயே மின்கட்டணத்தை பேணுவதற்கு இலங்கை மின்சார சபை பரிந்துரைத்துள்ளது.
எனினும் இந்த விடயம் தொடர்பில் பொது மக்களின் கருத்துக்களையும், யோசனைகளையும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு கோரியிருந்தது.
இதற்கமைய அது தொடர்பான இறுதி தீர்மானத்தை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இன்று அறிவிக்கவுள்ளது.