மல்வத்து ஓயாவின் வெள்ள அபாய எச்சரிக்கை நீடிப்பு
மல்வத்து ஓயா ஆற்றுப் படுகையில் வெள்ள அபாய எச்சரிக்கை அடுத்த 24 மணி நேரத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பாக அப்பகுதியில் வசிக்கும் மக்கள் மிகவும் விழிப்புடன் இருக்குமாறு நீர்ப்பாசன திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.
மேலும், குறுக்கு வீதிகளில் பயணிப்பவர்களும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
CATEGORIES Sri Lanka