கந்தளாய் குளத்தின் இரு வான் கதவுகள் திறப்பு

கந்தளாய் குளத்தின் இரு வான் கதவுகள் திறப்பு

தற்போது கந்தளாய் குளத்தில் 104375 கன அடி நீர் உள்ளதால், மேலதிகமான நீரை வெளியேற்றுவதற்காக இரண்டு வான்கதவுகள் திறக்கப்பட்டதாகவும், தொடர்ந்து மழை அதிகரிக்குமாக இருந்தால், அதிகமான வான் கதவுகளை திறக்க வேண்டிய நிலை ஏற்படும். இந்த நிலையில் விவசாய நிலங்களை பாதுகாக்க முடியாமல் போகும். இதன் காரணமாகவே இன்று (16) முற்பாதுகாப்பு நடவடிக்கையாக இருவான் கதவுகள் திறக்கப்பட்டதாகவும் விவசாயத் திணைக்களம் மேலும் தெரிவித்தது.

மேலதிக நீர் வெளியிடப்படுகின்றமையால் குளத்தின் கீழ்பகுதியில் வாழுகின்ற மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறும் மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )