போதைப்பொருட்களுடன் மூவர் கைது

போதைப்பொருட்களுடன் மூவர் கைது

களுபோவில பகுதியில் இன்று (16) காலை மேற்கொள்ளப்பட்ட இரண்டு சுற்றிவளைப்புகளில் ஒரு பெண் உட்பட மூன்று பேர் கைதுசெய்யப்பட்டதாக கல்கிசை குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.

கைதுசெய்யப்பட்டவர்களிடமிருந்து 3 கோடி ரூபாய் பெறுமதியான 1 கிலோ 594 கிராம் போதைப்பொருளும் 4 கிலோ கிராம் கேரள கஞ்சாவும் மீட்கப்பட்டுள்ளதாகவும் சந்தேக நபர்களை போதைபொருட்களுடன் கல்கிசை பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் கல்கிசை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )