2025 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 2,352 டெங்கு நோயாளர்கள் அடையாளம்
2025 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 2,352 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் என தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
374 டெங்கு நோயாளர்கள் கம்பஹா மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளனர். இதனைத் தொடர்ந்து கொழும்பு மாவட்டத்தில் 304 பேரும், காலி மாவட்டத்தில் 169 பேரும் பதிவாகியுள்ளனர்.
இந்த நிலையில், நாடளாவிய ரீதியில் இதுவரை டெங்கு நோயினால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை எனத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.