மன்னார் நீதிமன்றத்திற்கு முன்பாக துப்பாக்கிச் சூடு – இருவர் உயிரிழப்பு !
மன்னார் நீதிமன்றத்திற்கு முன்பாக இன்று முற்பகல் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர் என மன்னார் வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
உந்துருளியில் பிரவேசித்த இருவர் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தி விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.