விஜித் விஜயமுனி சொய்சாவின் ஜீப் ரக வாகனம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்!

விஜித் விஜயமுனி சொய்சாவின் ஜீப் ரக வாகனம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்!

முன்னாள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா பயன்படுத்திய ஜீப் ரக வாகனம், ஒன்று சேர்க்கப்பட்ட வாகனமா என்பதை கண்டறிவதற்கான விசாரணைகளை வலான ஊழல் தடுப்பு பிரிவு ஆரம்பித்துள்ளது.

குறித்த ஜீப் ரக வாகனம் கடந்த மாதம் ஹப்புத்தளை பகுதியில் வைத்து கைப்பற்றப்பட்டது.

இந்த விடயம் தொடர்பில் பண்டாரவளை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வதற்கும் பொலிஸாரினால் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதற்கமைய, இந்த விடயம் தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக அழைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா நேற்று முன்தினம் வலான ஊழல் தடுப்பு பிரிவில் முன்னிலையானார்.

இரண்டு சட்டத்தரணிகளுடன் வலானை ஊழல் தடுப்பு பிரிவிற்கு சென்ற அவர், வாக்குமூலம் பெறும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டவுடன் திடீரென சுகவீனமுற்றதாக கூறி அங்கிருந்து வெளியேறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இந்த விடயம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சாவிடம் வாக்குமூலம் பெறுவதற்கு பிரிதொரு திகதியை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )