இரணைமடு குளத்தின் அனைத்து வான் கதவுகளும் திறப்பு
கனமழையால் இரணைமடு குள நீர்மட்டத்தின் அளவு தற்போது 36 அடி 10.5 அங்குலத்தை தாண்டி உள்ளதுடன் குளத்தில் 10.5 அங்குலம் வான் பாயந்து கொண்டிருப்பதால் குளத்தின் அனைத்து கதவுகளும் திறக்கப்பட்டு மேலதிக நீர் வெளியிடப்படுகின்றது.
எனவே குளத்தின் கீழ்பகுதியில் வாழுகின்ற மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தில் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகின்றமையால் மாவட்டத்தில் உள்ள சிறு குளங்களான கனகாம்பிகைகுளம், வன்னேரி குளம், பிறமந்தனாரு குளம் ஆகியன வான் பாய ஆரம்பித்துள்ளன.
CATEGORIES Sri Lanka