இலஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரிகள் இருவர் பணிநீக்கம்
மிதிகம பொலிஸ் நிலையத்தின் 2 கான்ஸ்டபிள்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். வௌிநாட்டு பெண்ணொருவரிடம் இருந்து இலஞ்சம் பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைதான கான்ஸ்டபிள்கள் கடந்த 31ஆம் திகதி வௌிநாட்டு பெண்ணொருவரிடம் இருந்து 5,000 ரூபா இலஞ்சமாகப் பெற்றுக்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
CATEGORIES Sri Lanka