தொலைபேசி சேவைக் கட்டணங்கள் அதிகரிப்பு ?
கையடக்க தொலைபேசி சேவை கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக வெளியாகும் செய்தியில் உண்மையில்லையென தொலைத்தொடர்புகள் ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழுவின் சந்தைப்படுத்தல் போட்டிப் பிரிவின் பணிப்பாளர் இந்திரஜித் ஹந்தபான்கொட தெரிவித்துள்ளார்.
இவ்வாறான செய்தி உண்மைக்குப் புறம்பானதாகும். எந்தவொரு விலை அதிகரிப்பும் மேற்கொள்ளப்படவில்லை என சகல தொலைபேசி சேவை வழங்கும் நிறுவனங்களும் எழுத்துமூலம் அறிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்
CATEGORIES Sri Lanka