மஹிந்தவின் பெயர் மைதானத்திலிருந்து விரைவில் நீக்கப்படும்

மஹிந்தவின் பெயர் மைதானத்திலிருந்து விரைவில் நீக்கப்படும்

மஹிந்த ராஜபக்ஷவின் பெயரை மைதானத்திலிருந்து மிக விரைவில் நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரவை அமைச்சர் சுனில் குமார கமகே தெரிவித்துள்ளார்.

ஹோமாகம தியகம சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். 

இந்த விளையாட்டு வளாகம் தற்போது மிகவும் பாழடைந்த நிலையில் உள்ளதுடன் பெருமளவிலான பொது பணம் வீணடிக்கப்பட்டுள்ளது. எனவே, தனியார் துறை முதலீட்டாளர்களுடன் இணைந்து விளையாட்டு வளாகத்தை மேம்படுத்துவது அவசியம் எனவும் இதற்கு எந்தவொரு முதலீட்டாளரும் விளையாட்டு வளாகங்களை பராமரிக்க பணத்தை முதலீடு செய்ய மாட்டார்கள் என்பதால் மஹிந்த ராஜபக்ஷவின் பெயர் நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்த விளையாட்டு வளாகத்தின் கட்டுமானத்தின் போது நடந்த மோசடி மற்றும் ஊழல் குறித்து சிறப்பு விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், மஹிந்த ராஜபக்ஷவின் பெயரில் விளையாட்டு வளாகங்களை நடத்துவதற்கு எந்த முதலீட்டாளரும் பணத்தை முதலீடு செய்ய மாட்டார்கள் என்று நம்புவதால், அந்தப் பெயரை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS Wordpress (0) Disqus ( )