அதி வேகத்தில் பயணிக்கும் வாகனங்களை அடையாளங்காண பொலிஸாருக்கு புதிய சாதனங்கள்
அதி வேகத்தில் வாகனம் ஓட்டும் ஓட்டுநர்களை அடையாளம் காண போக்குவரத்து அதிகாரிகளுக்கு 91 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள 30 வேக துப்பாக்கி சாதனங்களை ஒப்படைக்கும் நிகழ்ச்சி இன்று பொலிஸ் தலைமையகத்தில் பதில் பொலிஸ் மா அதிபர், சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய தலைமையில் நடைபெற்றுள்ளது.
அதன்படி, முதல் கட்டமாக, வேகமானி கருவிகள் நீர்கொழும்பு, களனி மற்றும் கம்பஹா பிரிவுகளுக்குப் பொறுப்பான பிரிவு அதிகாரிகளுக்கும் மேற்கு மாகாண போக்குவரத்து தெற்குப் பிரிவின் பணிப்பாளருக்கும் வழங்கப்பட்டுள்ளன.
மேலும், எதிர்காலத்தில் இந்த வேகமானியை இயக்குவதற்கு தேவையான பயிற்சியை போக்குவரத்து அதிகாரிகளுக்கும் பொலிசாருக்கும் போக்குவரத்து தலைமையகம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.