கார் ரேஸ் முடியும் வரை எந்த படத்திலும் நடிக்க மாட்டேன்! நடிகர் அஜித் அறிவிப்பு
கார் ரேஸ் போட்டிகளில் தீவிர கவனம் செலுத்தி வரும் நடிகர் அஜித், அது முடியும் வரை படங்கள் நடிப்பதில் கவனம் செலுத்தப்போவது இல்லை என்றும், எந்தவொரு படத்திலும் நடிக்க கையெழுத்திட மாட்டேன் என முடிவு எடுத்துள்ளதாக அறிவித்துள்ளார்.
அதன்படி, அடுத்த 9 மாதங்களுக்கு நடிகர் அஜித் எந்தவொரு படங்களிலும் நடிக்கப்போவதில்லை என தெரிவித்துள்ளார்.
நடிப்பைபோலவே , பைக் மற்றும் கார் ரேசிங்கிலும் அதீத ஆர்வமிக்கவர் அஜித் குமார் .
இதன் காரணமாக பல்வேறு விபத்துக்களில் சிக்கி, உடல் முழுவதும் பல்வேறு அறுவை சிகிச்சைசள் செய்து, மீண்டும் பல்வேறு படங்களில் நடித்து வந்தார்.
இந்த நிலையில், அவருக்கு மீண்டும் ரேசில் ஆர்வம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, அவர் படங்களில் நடிப்பதற்கு சில காலம் ஒய்வு அளித்து விட்டு, கார் ரேசில் ஈடுபட்டு வருகிறார்.
தற்போது துபாயில் நடைபெற்று வரும், லக புகழ் பெற்ற 24 ஹவர்ஸ் துபாய் கார் ரேஸ் பந்தயத்தில் அவர் கலந்துக் கொண்டிருக்கின்றார்.
மிஷ்லின் 24 ஹவர்ஸ் துபாய் (Michelin 24H Dubai) கார் ரேஸ் பந்தயத்தில் அஜித்குமார் அவரது அஜித் குமார் ரேசிங் குழு சார்பில் கலந்து வருகின்றார்.
இந்த போட்டிக்கான தகுதி சுற்றில் நடிகர் அஜித் குமார் பங்கேற்ற நிலையில், முதல் சுற்றில் அவரது கார் விபத்துக்குள்ளான நிலையில், மீண்டும் தகுதிச்சுற்றில் பங்கேற்று ஏழாவது இடத்தைப் பிடித்திருக்கின்றார்.
இது அவரது ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது.
இந்த ரேஸ் பந்தயம் மட்டுமின்றி விரைவில் இன்னும் பல கார் பந்தயங்களில் அவர் கலந்துக் கொள்ள இருப்பதாக அறிவித்திருக்கின்றார்.
அந்தவகையில், ஆசிய ஃபார்முலா பிஎம்டபிள்யூ சாம்பியன்ஷிப், பிரிட்டிஷ் ஃபார்முலா 3 சாம்பியன்ஷிப் மற்றும் எஃப்ஐஏ ஃபார்முலா 2 சாம்பியன்ஷிப் ஆகிய போட்டிகளிலும் அவர் கலந்துக் கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.