2025இல் தன் முதல் கோலை பதிவு செய்த ரொனால்டோ
2025ஆம் ஆண்டில் தனது முதல் கோலை பதிவுசெய்தார் கிறிஸ்டியானோ ரொனால்டோ.
சவுதி அரேபியாவில் உள்ள அல் நசர் கிளப் அணிக்காக விளையாடிய போது இந்த கோலை அவர் பதிவு செய்தார்.
கிளப் மற்றும் தேசிய அளவில் இது அவரது 917ஆவது கோலாகும்.
போர்த்துக்கல் உதைபந்தாட்ட அணியின் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோவை கடந்த 2023இல் 1,775 கோடிக்கு ஒப்பந்தம் செய்தது அல் நசர் கிளப் அணி.
அவர் இந்த ஆண்டு ஜூன் வரையில் அல் நசர் அணியோடு விளையாடும் வகையில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் சூழலில் ரியாத் நகரில் சவுதி புரோ லீக் தொடரில் அல் ஓக்தூத் அணியுடனான போட்டியில் ரொனால்டோ விளையாடினார்.
இதில் எதிரணி 8ஆவது நிமிடத்தில் முதல்கோலை பதிவு செய்து முன்னிலை பெற்றது.
இருப்பினும், அதற்கான பதில் கோலை அல் நசர் அணி வீரர் சாடியோ மானே 29ஆவது நிமிடத்தில் பதிவு செய்தார்.
தொடர்ந்து 42ஆவது நிமிடத்தில் அல் நசருக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி கோல் பதிவு செய்தார் ரொனால்டோ.
இதன் மூலம் 3-1 என்ற கோல் கணக்கில் அல் நசர் வெற்றி பெற்றது.
இதன் மூலம் தனித்துவ வரலாற்று சாதனையை ரொனால்டோ படைத்தார்.
கடந்த 2002ஆம் ஆண்டு முதல் தொழில் முறை உதைபந்தாட்ட களத்தில் தொடர்ச்சியாக 24 ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் கோல் பதிவு செய்து அசத்தியுள்ளார்.
கடந்த 2024ஆம் ஆண்டில் மட்டும் கிளப் மற்றும் தேசிய அணிக்காக விளையாடி 43 கோல்களை பதிவு செய்திருந்தார்.
அதற்கு முந்தைய ஆண்டில் 54 கோல்களை பதிவு செய்திருந்தார்.