ரணிலால்தான் அரிசித் தட்டுப்பாடு ஏற்பட்டது என்பதை ஏற்கமுடியாது !

ரணிலால்தான் அரிசித் தட்டுப்பாடு ஏற்பட்டது என்பதை ஏற்கமுடியாது !

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரிசியை இலவசமாக வழங்கியதால்தான் தற்போது அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அரசாங்கம் கூறும் குற்றச்சாட்டை எம்மால் ஏற்றுக்கொள்ளமுடியாது அனுபவமின்மை மற்றும் முகாமைத்துவம் செய்வதில் உள்ள குறைப்பாடுகளே இதற்கு பிரதான காரணம் என ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தலின் போது முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரிசியை
இலவசமாக வழங்கியதால் தான் தற்போது சிவப்பு அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள
தாக வர்த்தக அமைச்சர் கடந்த புதன்கிழமை பாராளுமன்றத்தில் குற்றம் சுமத்தியிருந்தார்.

இந்நிலையில் ஐக்கிய தேசியகட்சியின் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இந்த விடயம் தொடர்பில் கட்சியின் தவி
சாளர் தெளிவுப்படுத்தி இருந்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

‘ஜனாதிபதித் தேர்தலின் போது முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரிசியை
இலவசமாக வழங்கியதால் தான் தற்போது சிவப்பு அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள
தாக அரசாங்கம் கூறும் குற்றச்சாட்டை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது.

அதனை நாம் முற்றாக நிராகரிக்கிறோம்.

இந்த நாட்டில் உள்ள மக்களுக்கு ஒருநாளுக்கு தேவையான அரிசியின் அளவு
நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

எனவே அதனை பணம் கொடுத்தோ அல்லது இலவசமாக வழங்கினாலுமோ தட்டுப்பாடு ஏற்படாது.

இதனை நாம் அனுபவம் அற்ற தன்மை எனக் கூறுகிறோம்.

2021 மற்றும் 2021 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் விவசாயிகள் விவசாய நிலங்களில்
இருக்கவில்லை.

பயிர்ச்செய்கை மேற்கொள்ளாமல் உரமின்றி மண்வெட்டிகளுடன் வீதிகளில்
இறங்கிப் போராட்டங்களை மேற்கொண்டிருந்தனர்.

அப்போது விவசாய நிலங்கள் வெறுமையாகவே இருந்தன.

அந்த இக்கட்டான காலப்பகுதியில் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தைப் பொறுப்
பேற்று விவசாயிகளுக்கு தேவையான நிவாரணங்களை வழங்கி போதுமான உரத்தையும் பெற்றுக்கொடுத்து அவர் களை விவசாய நிலங்களுக்கு
அனுப்பி விவசாயத்தில் ஈடுபடுவதற்கு நடவடிக்கை எடுத்தார்’
என்றார்

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )