ஆர்ப்பாட்டம் நடாத்த தடை
பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான மாணவர் ஒன்றிய (IUSF) போராட்டக்காரர்கள், ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் உள்ள சில பகுதிகளுக்குள் மதியம் 1 மணி முதல் மாலை 6 மணி வரை நுழைய தடை விதித்து கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதன்படி, பிற்பகல் 1 மணி முதல் 4 மணி வரை ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி மாளிகை, நிதியமைச்சு மற்றும் மத்திய வங்கி ஆகியவற்றிற்குள் போராட்டக்காரர்கள் பிரவேசிக்க தடை விதித்து கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
CATEGORIES Sri Lanka