பரீட்சை வினாத்தாள்கள் கசிவு ; ஆசிரியர் பணி இடைநீக்கம்
வடமத்திய மாகாணத்தில் உள்ள அரச பாடசாலைகளில் 6ஆம் மற்றும் 7ஆம் தர பரீட்சையின் வினாக்கள் கசிந்தமைக்கு காரணமான ஆசிரியர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பணி இடைநிறுத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வடமத்திய மாகாண கல்விச் செயலாளர் தெரிவித்துள்ளார்.