கருக்கலைப்பு மாத்திரைகளை விற்றவர் கைது

கருக்கலைப்பு மாத்திரைகளை விற்றவர் கைது

நுவரெலியாவில் கருக்கலைப்பு மாத்திரைகளை விற்பனை செய்த மருந்தகத்தின் உரிமையாளர் நுவரெலியா பிரிவு ஊழல் தடுப்பு பிரிவின் அதிகாரிகள் மற்றும் நுவரெலியா சுகாதார வைத்திய அதிகாரியினால் நேற்று (06) கைது செய்யப்பட்டார்.

சட்ட விரோத கருக்கலைப்பு மாத்திரையை 15,000 ரூபாய்க்கு மருந்தக உரிமையாளர் விற்பனை செய்வதாக பிரதேச ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இலஞ்ச ஒழிப்பு பிரிவின் நிலைய அதிகாரி மேனன் தெரிவித்துள்ளார்.

நுவரெலியா சுகாதார வைத்திய அதிகாரியுடன் இணைந்து உத்தியை பயன்படுத்தி சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரின் மருந்தகத்தில் விற்பனைக்காக ஏராளமான கருக்கலைப்பு மாத்திரைகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளதாகவும், சட்டவிரோதமாக நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட கருக்கலைப்பு மாத்திரைகளை விற்பனை செய்வது முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )