பழைய பொலிஸ் தலைமையகத்தில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.விகள் மாயம்
கொழும்பு கோட்டையில் அமைந்துள்ள பழைய பொலிஸ் தலைமையகத்தில் பொருத்தப்பட்டிருந்த 07 சி.சி.டி.வி கெமராக்கள் காணாமல் போயுள்ளன. இது தொடர்பில் பொலிஸ் தலைமையகம், கோட்டை பொலிஸில் முறைப்பாடும் செய்துள்ளது.
தற்போது, பொலிஸ் தலைமையகம் கொம்பனி வீதியில் உள்ள பழைய விமானப்படை தளத்தில் நிறுவப்பட்டுள்ளது.
பொலிஸ் தலைமையகத்தை அந்த இடத்திற்கு கொண்டு சென்றதன் பின்னர் இந்த சிசிடிவி கெமராக்கள் காணாமல் போயுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
பழைய பொலிஸ் தலைமையகத்தின் 5வது மாடியில் இந்த சிசிடிவி கெமராக்கள் பொருத்தப்பட்டிருந்ததாகவும், அவற்றின் பெறுமதி இதுவரை கணக்கிடப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
CATEGORIES Sri Lanka