போலி நாணயத்தாள்களுடன் 3 பேர் கைது

போலி நாணயத்தாள்களுடன் 3 பேர் கைது

தமன, வனகமுவ பிரதேசத்தில் கையடக்க தொலைபேசி விற்பனை நிலையம் என்ற போர்வையில் வீடொன்றில் இயங்கி வந்த 5,000 ரூபாய் போலி நாணயத்தாள் தயாரிக்கும் தொழிற்சாலையை சுற்றிவளைத்து மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், போலி நாணயத்தாள்கள் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் மடிக்கணினி உள்ளிட்ட பல உபகரணங்களையும் கைப்பற்றியுள்ளதாக தமன பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட மூன்று இளைஞர்களும் 29-20 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும், அவர்கள் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்கள் எனவும் தகவல் வெளியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அந்த இடத்தில் ஏ4 அளவு தாள்கள் , மூன்று அச்சடிக்கப்பட்ட பிறகும் வெட்டி அகற்றப்படாத 10 போலியான  5000 ரூபாய் பெறுமதியான நோட்டுகளை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். 

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )