கிளிநொச்சியில் நீர் நிரப்பப்பட்ட குழியிலிருந்து இனம் தெரியாத இரண்டு சடலங்கள் மீட்பு

கிளிநொச்சியில் நீர் நிரப்பப்பட்ட குழியிலிருந்து இனம் தெரியாத இரண்டு சடலங்கள் மீட்பு

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்டாவலி பகுதியில் புளியம்பொக்கனே பாலம் அமைப்பதற்காக தோண்டப்பட்ட நீர் நிரப்பப்பட்ட குழியில் இரண்டு சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு சடலமாக மீட்க்கப்பட்டவர்கள் 20 மற்றும் 23 வயதுடைய நிலாவெளி பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் குறித்த குழியில் இருந்து மோட்டார் சைக்கிள் இன்று மீட்க்கப்பட்டுள்ளதாகவும் மோட்டார் சைக்கிளின் கட்டுப்பாட்டை இழந்ததில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சடலங்கள் கிளிநொச்சி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிளக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )