நாட்டின் பொருளாதாரம்  மிகவும் நெருக்கடியான நிலையில் காணப்படுகின்றது

நாட்டின் பொருளாதாரம் மிகவும் நெருக்கடியான நிலையில் காணப்படுகின்றது

நாட்டின் பொருளாதாரம் இன்று மிகவும் நெருக்கடியான நிலையில் காணப்படுவதாக வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

விழுந்த இடத்தில் இருந்து எழுந்து நாட்டை மீட்க அனைவரும் உறுதியுடன் இருக்க வேண்டும் என்றார். குடும்பமாக உழைக்கும் போது குடும்ப முன்னேற்றத்திற்காக சில முடிவுகளை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.

தனது அமைச்சில் அதிகாரிகளிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் அவர், ”அந்த முடிவுகள் குடும்ப நலனுக்காக எடுக்கப்பட வேண்டும் என்று கூறிய அவர், குடும்ப நலமே தங்கள் நலம் என்பதை குழந்தைகள் ஒரு நாள் புரிந்து கொள்வார்கள் . அவ்வாறே நாட்டின் நலன் கருதி எடுக்கும் தீர்மானங்கள் சில நேரம் நமக்கு கஷ்டமாக இருந்தாலும் அதனை பழகிக் கொள்ள வேண்டி வரும், தப்பாக நினைக்க வேண்டாம்.” என தெரிவித்தார்

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )