நாகப்பட்டினம்-காங்கேசன்துறை கப்பல் சேவை மீண்டும் தாமதம்

நாகப்பட்டினம்-காங்கேசன்துறை கப்பல் சேவை மீண்டும் தாமதம்

தமிழகத்தின் நாகப்பட்டினத்திலிருந்து காங்கேசன்துறைக்கு இயக்கப்படும் பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை மீண்டும் தாமதமடைந்துள்ளது. 

சீரற்ற காலநிலை காரணமாக நிறுத்தப்பட்டிருந்த கப்பல் சேவையை இன்று (02) முதல் மீண்டும் ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது. 

எனினும் கப்பல் சேவை மீண்டும் தாமதமடைவதாக குறித்த கப்பல் சேவை நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் சுந்தரராஜ் பொன்னுசாமி தெரிவித்துள்ளார். 

வெவ்வேறு தரப்பிடம் இருந்து கிடைக்கப் பெற்ற வானிலை முன்னறிவித்தலைக் கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

இதன்படி, குறித்த கப்பல் சேவையை எதிர்வரும் 6ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிப்பதற்கு எதிர்பார்ப்பதாகவும் குறித்த கப்பல் சேவை நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் சுந்தரராஜ் பொன்னுசாமி தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )