குறுகிய பேதங்களுக்கு அப்பாற்பட்டு நாட்டைக் கட்டியெழுப்ப ஒன்றிணைவோம்
குறுகிய பேதங்களுக்கு அப்பாற்பட்டு நாட்டைக் கட்டியெழுப்பும் தேசியப் பணிக்கு ஆயத்தமாக வேண்டும்.
வெளிப்படைத்தன்மையுடன் நாட்டுக்கும் மக்களுக்கும் பொறுப்புக்கூறக்கூடிய உன்னத சேவையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசியல் தலைவர்கள் மற்றும் அரச ஊழியர்கள் ஒன்றிணைந்து இதனை ஒரு பொறுப்பாகவும் கடமையாகவும் கருத வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
சாதாரண மக்களுக்கு முன்னுரிமை வழங்குவதன் மூலம் உன்னத, நேரிய பயனுள்ள பொதுச் சேவையை வழங்குதல் போலவே நெறிமுறைகளைப் பேணுவதுடன், பொதுச் சொத்துக்கள் மற்றும் வளங்களை துஷ்பிரயோகம் செய்ய அனுமதிக்கக் கூடாது. நாட்டுக்கு செயல் திறமையோடு வினைத்திறனான சேவையை ஆற்ற வேண்டும். தனிநபர் இலாபத்தை விட நாட்டு மக்களின் நலனுக்காக கூட்டாக செயற்பட ஒன்றிணையுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
2025 ஆம் புத்தாண்டில் கடமைகளை ஆரம்பிக்கும் முகமாக இன்று(01) காலை எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட உத்தியோகபூர்வ நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
சர்வமத தலைவர்களின் ஆசிர்வாதங்களுடன் மிகவும் நேர்த்தியான முறையில் இங்கு புது வருட கடமைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.