டிக்கெட் முன்பதிவு செய்வோருக்கு முக்கிய அறிவிப்பு

டிக்கெட் முன்பதிவு செய்வோருக்கு முக்கிய அறிவிப்பு

புகையிரத இருக்கைகளை முன்பதிவு செய்யும் போது பயணிகள் தமது தேசிய அடையாள அட்டை  இலக்கம் அல்லது கடவுச்சீட்டு இலக்கத்தை உள்ளிட வேண்டும் என இலங்கை புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.

புகையிரத நிலையத்திற்குள் உட்பிரவேசிக்கும் போதும், புகையிரதத்திற்குள் அனுமதி சீட்டுகளை சரிபார்க்கும் போதும், ​​அனுமதி சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள தேசிய அடையாள அட்டை எண் அல்லது வெளிநாட்டு கடவுச்சீட்டு எண் ஆகியவற்றை சரிபார்த்து உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி நாளை (01) முதல் முன்பதிவு செய்யப்பட்ட இருக்கைகளுக்கான பயணச்சீட்டு பணத்தைத் திரும்பப் பெற விண்ணப்பிக்கும் போது பயணச்சீட்டு உரிமையாளரின் அடையாளத்தை உறுதிப்படுத்த பயணிகளின் தேசிய அடையாள அட்டை அல்லது வெளிநாட்டு கடவுச்சீட்டின் நகலைத் புகையிரத நிலையத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )