தென் கொரியாவில் விமான விபத்து – 47பேர் பலி!

தென் கொரியாவில் விமான விபத்து – 47பேர் பலி!

தென் கொரியாவிலுள்ள முவான் சர்வதேச விமான நிலையத்தில் விமானம் ஒன்று ஓடுபாதையில் இருந்து விலகி தரையில் மோதி விபத்துக்குள்ளாகியதில் 47 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த விமானத்தில் 175 பயணிகள், ஆறு பணியாளர்கள் உட்பட மொத்தம் 181 பேர் பயணித்துள்ளனர்.

இந்த விமானம் தென் கொரியாவின் சியோலில் இருந்து 288 கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள தெற்கு ஜெயோலா மாகாணத்தில் உள்ள விமான நிலையத்தில் தரையிறங்க முற்பட்ட போது ஓடுபாதையில் இருந்து விலகி சுவர் ஒன்றில் வேகமாக சென்று மோதியுள்ளது.

இதில் விமானம் உடைந்து, வேகமாக தீப்பிடித்து வெடித்தது. விமானம் விபத்தில் சிக்கியதையடுத்து மீட்பு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )