சூர்யா 44 டைட்டில் டீசர் வெளியீடு

சூர்யா 44 டைட்டில் டீசர் வெளியீடு

சூர்யாவின் 44வது படத்தை பிரபல இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ்  இயக்கியுள்ளார். இந்த படத்தை சூர்யாவின் 2டி மற்றும் காரத்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.

இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.இப் படத்தில் சூர்யா இரட்டை வேடங்களில் நடித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இப்படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். ஜோஜூ ஜார்ஜ், கருணாகரன், ஜெயராம் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்நிலையில் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ளது என படக்குழு சில மாதங்களுக்கு முன் அறிவித்தது. இப்படம் ஒரு காதல் திரைப்படம் அதில் நிறைய ஆக்ஷன் காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் கூறினார். திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு சிரேயா சரண் சிறப்பு நடனம் ஆடியுள்ளார்.

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சூர்யா 44 படத்தின் டைட்டில் டீசரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தப் படம் ரெட்ரோ என்ற தலைப்பில் வெளியாக இருக்கிறது.

மேலும், இந்தப் படம் அடுத்த ஆண்டு கோடை காலத்தில் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )