ஒரே முட்டையில் 2 கோழி குஞ்சுகள்
தெலுங்கானா மாநிலம், அடிலாபாத் மாவட்டம், போத் மண்டலத்தை சேர்ந்தவர் ஷேக் தவ்பிக். இவர் வீட்டில் ஏராளமான கோழிகளை வளர்த்து வருகிறார்.
இதில் ஒரு கோழி முட்டைகளை அடைகாத்து வந்தது. அடைகாக்கப்பட்ட ஒரு முட்டையில் இருந்து நேற்று (23) 2 கோழிக்குஞ்சுகள் வந்தது. 2 கோழிக்குஞ்சுகளும் தற்போது நலமாக உள்ளது. இந்த அதிசய சம்பவம் ஊர் முழுவதும் பரவியது. ஏராளமான மக்கள் அதிசய கோழிக்குஞ்சுகளை பார்த்து செல்கின்றனர்.
இதுகுறித்து கால்நடைத்துறை மருத்துவர் ஒருவர் கூறுகையில்:- மரபணு குறைபாடு காரணமாக ஒரே முட்டையில் 2 கோழி குஞ்சுகள் பொறித்துள்ளது என தெரிவித்துள்ளார்.
CATEGORIES India