எட்கா ஒப்பந்தம் குறித்து ஜனாதிபதியின் இந்திய விஜயத்தில் ஆழமாக பேசப்படவில்லை
இந்தியாவுடன் எட்கா ஒப்பந்தத்தை அமுல்படுத்த எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இணக்கப்பாடு எட்டப்படவில்லையென அரசாங்கம் அறிவித்துள்ளது.
கொழும்பில் செய்தியாளர்களை சந்தித்த போதே வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், ”அதானியின் திட்டம் தொடர்பில் நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் அது முடிந்த பின்னர் அதைப்பற்றி பேசலாம் என்று தெரிவித்த அமைச்சர் ஹேரத் , 13 ஆவது திருத்த அமுலாக்கம் என்பன இலங்கையின் அரசியலமைப்புக்கு உட்பட்டே நடக்கும்.
எட்கா ஒப்பந்தம் குறித்து ஜனாதிபதியின் இந்திய விஜயத்தில் ஆழமாக பேசப்படவில்லை.” என தெரிவித்துள்ளார் .