பசறை – பதுளை வீதியில் ஆணொருவரின் சடலம் மீட்பு

பசறை – பதுளை வீதியில் ஆணொருவரின் சடலம் மீட்பு

பசறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பசறை – பதுளை வீதியில் கோயில் கடைக்கு அருகாமையில் 45-50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.

பசறை – பதுளை வீதியில் கோயில் கடைக்கும், பசறை பால்சபைக்கும் இடையே வீதி ஓரமாக குறித்த நபரின் காணப்படுவதுடன் அவ்விடத்தில் பாதணிகளும், பை ஒன்றும் அதற்கு அருகாமையில் பை ஒன்றில் 4 யோகட் கோப்பைகளும் காணப்படுகின்றன.

இறந்தமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்

மேலதிக விசாரணைகளை பசறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )