எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரிப்பு
யாழ். மாவட்டத்தில் எலிக்காய்ச்சல் நோய் காரணமாக இதுவரை 110 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சுமார் 7,200 பேருக்கு தடுப்பு மருந்து வழங்கப்படுள்ளதாக யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
தற்போது பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 28 பேரும் யாழ். போதனா வைத்தியசாலையில் 8 பேரும் சிகிச்சைபெற்று வருகின்றனர்.
கடந்த 24 மணிநேரத்தில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 6 நோயாளர்களும் யாழ். போதனா வைத்தியசாலையில் 5 நோயாளர்களும் எலிக்காய்ச்சலுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணிநேரத்தில் இந்நோய் காரணமாக எந்தவொரு இறப்பும் ஏற்படவில்லை.
இதுவரை யாழ். மாவட்டத்தில் இந்த நோய் காரணமாக 7 இறப்புக்கள் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
CATEGORIES Sri Lanka