உப்பு இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி

உப்பு இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி

உப்பு தட்டுப்பாட்டுக்கு தீர்வாக ஜனவரி மாதத்தில் பதனிடப்படாத அயடின் சேர்க்கப்படாத 30,000 மெட்ரிக் தொன் உப்பை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானிந்துள்ளது. 

இலங்கையின் உப்பு உற்பத்தி நாட்டின் வீட்டுத் தேவைகளுக்கும் மற்றும் கைத்தொழில் தேவைகளுக்கும் நிலவும் கேள்வியைப் பூர்த்தி செய்வதற்காக 2025 ஆண்டின் முதலாம் காலாண்டில் உள்நாட்டு சந்தையில் வீட்டுத் தேவைகளுக்கும் மற்றும் கைத்தொழில் தேவைகளுக்கான உப்பு விநியோகத்தில் பற்றாக்குறை ஏற்படலாமென அவதானிக்கப்பட்டுள்ளது. 

அதற்குத் தீர்வாக பதனிடப்படாத அயடின் சேர்க்கப்படாத 30,000 மெட்ரிக் தொன் உச்ச அளவுக்கு உட்பட்ட உப்பை 2025-01-31 திகதி அல்லது அதற்கு முன்னர் வரையறுக்கப்பட்ட இலங்கை அரச வர்த்தக (பலநோக்கு) கூட்டுத்தாபத்தின் மூலம் இறக்குமதி செய்ய அமைச்சரவை தீர்மானம் அனுமதி வழங்கியுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )