30 வருடங்களுக்குப் பின் மீண்டும் நகரத் தொடங்கிய உலகின் மிகப்பெரிய பனிப்பாறை

30 வருடங்களுக்குப் பின் மீண்டும் நகரத் தொடங்கிய உலகின் மிகப்பெரிய பனிப்பாறை

உலகின் மிகப்பெரிய பனிப்பாறை என்று அறியப்படும் A23a சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக எந்த நகர்வும் இல்லாமல் ஒரே இடத்தில் இருந்த நிலையில் தற்போது மீண்டும் நகரத் தொடங்கியுள்ளது.

லண்டனில் உள்ள கிரேட்டர் லண்டன் நகரை விட இருமடங்கு பெரிய அளவில் சுமார் ஒரு டிரில்லியன் டன் எடையுள்ள இந்த பனிப்பாறை பனிப்பாறை, 1986 ஆம் ஆண்டு அண்டார்டிகாவின் ஃபில்ச்னர் பனிக்கட்டியில் இருந்து உடைந்தது.

அன்றிலிருந்து, வெட்டெல் கடலில் தெற்கு ஓர்க்னி தீவுகளுக்கு அருகில் கடலின் அடிப்பகுதி சேற்றில் சிக்கிக் கொண்டது. இந்நிலையில் கடந்த 2020 இல் இந்த பனிப்பாறை வடக்கு நோக்கி மெதுவாக நகரத் தொடங்கியுள்ளது என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

தெற்குப் பெருங்கடலுக்குள் அண்டார்டிக் சர்க்கம்போலார் என்ற நீரோட்டத்தை பின்தொடர்ந்து இந்த பனிப்பாறை நகரும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நீரோட்டம் பனிப்பாறையை ஜார்ஜியாவின் தெற்குப் பகுதியை ஒட்டி உள்ள துணை அண்டார்டிக் தீவை நோக்கி இட்டுச் செல்லும் என்றும் அங்கு வெப்பமான நீருடன் சந்திக்கும் A23a பனிப்பாறை இறுதியில் சிறிய பனிப்பாறைகளாக உடைந்து பின்னர் உருகும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )