சபாநாயகர் பதவி விலகியது போன்று பார் பர்மிட் வழங்க சிபாரிசு செய்தவர்களும் பதவி விலக வேண்டும்
சபாநாயகர் பதவி விலகியது போன்று ‘பார் பர்மிட்’ வழங்க சிபாரிசு செய்தவர்களும் பதவி விலக வேண்டுமென தமிழரசுக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
சபாநாயகர் பதவி விலகியமை தொடர்பில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், “கலாநிதி பட்டம் தமக்கு இருக்கிறது. எனினும், அதனை தற்போது நிரூபிக்க முடியாது என்பதால் அவர் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.
அது நல்லதொரு விடயம். அதை நான் வரவேற்கின்றேன். இதேபோன்று மற்றவர்களும் ஏனயை விடயங்களுக்காக விலகுவார்களாக இருந்தால் அதுவும் நல்ல விடயமே. பார் பேர்மிட் எடுத்தவர்களும் தாமகவே விலகுவார்களாக இருந்தால் அதுவும் நல்ல விடயம்.
பார் போமிட் கொடுத்து விட்டேன் எனத் தெரிவித்து சீ.வி. விக்கினேஸ்வரனும் தேர்தலில் போட்டியிடமால் கொழும்புக்குச் சென்று விட்டார்.
ஒவ்வொரு இடங்களிலும் நிறைய ‘பார் பேர்மிட்’ கொடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. அதை சிபார்சு செய்தவர்கள் யார்? என்ற தகவல் இன்னும் வரவில்லை. இந்த தகவல்கள் வருகின்ற போது சிபார்சு செய்தவர்களும் சபாநாயகர் பதவி விலகியது போன்று விலக வேண்டும்.” என தெரிவித்துள்ளார்.