தன்னுயிரை மாய்த்த நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு
சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இணுவில் பகுதியில்தன்னுயிரை மாய்த்த நிலையில் இளைஞனின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
செட்டி வீதி, மேற்கு இணுவில் பகுதியைச் சேர்ந்த அமுதலிங்கம் நிவேதன் என்ற 31 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நேற்று (17) இரவு குறித்த இளைஞன் வீட்டின் முன்புறம் உள்ள காணியில் இருந்தபோது இரவு உணவுக்காக அவரது தாயார் இளைஞனை அழைத்துள்ளார்.
இதன்போது அவர் வருவதாக கூறிப்பிட்டு செல்லாமல் இருந்துள்ளார். நீண்ட நேரமாக அவர் வராத காரணத்தால் அவரது தொலைபேசிக்கு அழைப்பை விடுத்துள்ளார்கள். இருப்பினும் அவரின் தொலைபேசி செயலிழந்து காணப்பட்டுள்ளது.
இந்நிலையில் அவர் இன்று (18) காணியில் உள்ள மரம் ஒன்றில் தன்னுயிரை மாய்த்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.