பாராளுமன்ற கூட்டுக்குழுவில் இடம் பிடிக்கிறார் பிரியங்கா காந்தி
ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு மக்களவையில் தாக்கல் செய்தது.
இந்த மசோதவை நிறைவேற்ற வேண்டுமென்றால் மூன்றில் இரண்டு பங்கு எம்.பி.க்கள் ஆதரவு தேவை. ஆனால் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு இல்லாத நிலையில் மசோதாவை தாக்கல் செய்ததற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
எதிர்ப்பை மீறி மசோதா தாக்கல் செய்யப்பட்டது. அதன்பின் மசோதாவை பாராளுமன்ற கூட்டுக்குழுவிற்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டது. அதற்கான வாக்கெடுப்பில் மத்திய அரசு வெற்றி பெற்றது. இதனால் மசோதா பாராளுமன்ற கூட்டுக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற கூட்டுக்குழு விரைவில் அமைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் ஒவ்வொரு கட்சியில் இருந்தும் பிரதிநிதிகளாக எம்.பி.க்கள் இடம் பெறுவார்கள்.
அந்த வகையில் காங்கிரஸ் கட்சி பிரியங்கா காந்தி, மணிஷ் திவாரி, சுக்தியோ பகத், ரன்தீப் சுர்ஜிவாலா ஆகியோரை பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வயநாடு இடைத்தேர்தலில் போட்டியிட்டு பிரியங்கா காந்தி முதன்முறையாக எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார். முதன்முறையாக தேர்வு செய்யப்பட்ட நிலையில் முக்கிய மசோதா குறித்து முடிவு எடுக்கும் குழுவில் காங்கிரஸ் சார்பில் இடம் பிடிக்க உள்ளார்.