O/L மற்றும் A/L சான்றிதழ்களை சமர்ப்பித்தார் சஜித் பிரேமதாச
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, தனது கல்வி தகைமை தொடர்பான சான்றிதழ்களையும், ஆவணங்களையும் இன்று (17) சபையில் சமர்ப்பித்தார்.
தான் கல்வி கற்ற பாலர் பாடசாலை உள்ளிட்ட தகவல்களையும் அவர் வெளியிட்டார்.
ரோயல் கல்லூரியில் தான் மாணவர் தலைவராக இருந்ததாகவும் அவர் கூறினார்.
1983 மற்றும் 1984 காலப்பகுதியில் இங்கிலாந்தில் தான் சாதாரண தரப்பரீட்சை எழுதியதாகவும் அவர் குறிப்பிட்டார். சாதாரண தரத்தில் சித்தியடைந்தமைக்குரிய சான்றிதழ்களையும் முன்வைத்தார்.
தான் சாதாரணதரப்பரீட்சையில் சித்தியடையவில்லை என முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை அவர் நிராகரித்தார்.
உயர் தரமும் கற்றுள்ளதாகவும் அது தொடர்பான சான்றிதழ்களை முன்வைப்பதாகவும் எதிர்க்கட்சி தலைவர் கூறினார்.
1991 ஆம் ஆண்டு பட்டம் பெற்றுள்ளேன்.
நான் கூறிய விடயங்கள் அனைத்தும் உண்மை. முன்வைத்த சான்றிதழ்களும் உண்மை. அவை போலியென நிரூபித்தால் எம்.பி. பதவியை துறப்பதற்கும், அரசியலில் இருந்து ஒதுங்குவதற்கும் தயார்.” – என்றார்.