புதிய சபாநாயகர் சுயாதீனமாக செயற்படுவார் என நம்புகிறோம்
சட்டமன்றத்தின் உரிமைகளைப் பாதுகாத்துக் கொண்டு, மக்களுக்கு மேலும் உகந்த சேவையை வழங்குவதில் சபாநாயகருக்கு தனித்துவமான வகிபங்கு உண்டு. 225 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் தரமான அரச சேவையை வழங்குவதில் சபாநாயகரின் பாத்திரம் தனித்துவமானது என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
சகல உறுப்பினர்களினதும் கருத்துக்களையும் முன்மொழிவுகளையும் வேறுபாடின்றி கேட்பதன் மூலம் ஜனநாயகத்தை வலுப்படுத்துவதில் முக்கிய பங்காளராக சபாநாயகர் மாறுகிறார். முன்னாள் சபாநாயகரைப் போன்று நடந்து கொள்ளாது பணியை சிறப்பாக முன்னெடுக்குமாறும், மீண்டும் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை சமர்ப்பிக்க வேண்டிய தேவைப்பாடு ஏற்படாதவாறு நடந்து கொள்ளுமாறும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று (17) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.