9,500 மெற்றி டன் அரிசி இறக்குமதி
டிசம்பர் 4 ஆம் திகதியிலிருந்து இன்று (17) வரையான காலப்பகுதியில் 9,500 மெற்றிக் டன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கத்தின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, 3,300 மெற்றிக் டன் பச்சை அரிசியும், 6,020 மெற்றிக் டன் நாட்டு அரிசியும் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அனுமதிப் பத்திரமின்றி அரிசியை இறக்குமதி செய்வதற்காக வழங்கப்பட்ட கால அவகாசம் எதிர்வரும் 20ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.