கீர்த்தி சுரேஷ் கிறிஸ்தவ முறைப்படி மீண்டும் திருமணம்! (படங்கள்)
நடிகை கீர்த்தி சுரேஷ்- ஆண்டனி தட்டில் தம்பதிகளின் கிறிஸ்தவ முறைப்படி நடந்து முடிந்த திருமண புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
தென்னிந்திய சினிமாவில் பிரபலமாக இருக்கும் வாரிசு நடிகர்களில் ஒருவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ்.
இவர் நடித்த முதல் படமே ரசிகர்கள் மத்தியில் கீர்த்தி சுரேஷிற்கு நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது.
இதனை தொடர்ந்து விஜய், சூர்யா, விஷால் என கோலிவுட் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர ஆரம்பித்து விட்டார்.
தற்போது தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, தமிழ் பல மொழிப்படங்களில் நடித்து வருகிறார். தேசிய விருது வாங்கிய நடிகைகளில் ஒருவராக இருக்கும் கீர்த்தி சுரேஷ், தனக்குள் இருக்கும் மொத்த காதலையும் சினிமாவில் காட்டி நடித்து வருகிறார்.
இந்த நிலையில் கீர்த்தி சுரேஷின் திருமணம் கடந்த 12ஆம் திகதி கோவாவில் இந்து முறைப்படி பிரமாண்டமாக நடந்து முடிந்தது.
இதனை தொடர்ந்து இன்றைய தினம் கிறிஸ்தவ முறைப்படி இருவருக்கும் திருமணம் நடந்துள்ளது.
இதன்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
சினிமா பிரபலங்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் நடந்த இந்த திருமணத்தில் தம்பதிகள் மோதிரம் மாற்றிக் கொண்டு அன்பு முத்தத்துடன் திருமண வாழ்க்கையை ஆரம்பித்துள்ளனர்.