கதாநாயகனாக நடிக்கும் ரோபோ சங்கர்!

கதாநாயகனாக நடிக்கும் ரோபோ சங்கர்!

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவர் ரோபோ சங்கர்.

தொலைக்காட்சி காமெடி நிகழ்ச்சியில் மூலம் புகழ்பெற்றவர்.

இவர் ‘வாயமூடி பேசவும்’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முதல் முறையாக காமெடி நடிகராக அறிமுகமானார்.

இவர் கடந்த 2015-ம் ஆண்டு வெளியான ‘மாரி’ திரைப்படத்தில் தனுஷுடன் இணைந்து நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமானார்.

இவர் நடித்த சனிக்கிழமை என்ற கதாபாத்திரத்தால் அவருக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது.

அப்படம் அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

அதன் பிறகு தான் முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் நடிக்க துவங்கினார்.

இந்த நிலையில் ரோபோ சங்கர் அடுத்த கட்டமாக, டி2 மீடியா நிறுவனம் தயாரிக்கும் ‘அம்பி’ என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

இப்படத்தை பாஸர் ஜே.எல்வின் இயக்குகிறார்.

அஸ்வினி சந்திரசேகர் ரோபோ சங்கருக்கு ஜோடியாக நடிக்கிறார்.

இப்படத்தில் கஞ்சா கருப்பு, ரமேஷ் கண்ணா, இமான் அண்ணாச்சி, மீசை ரஜேந்திரன், கோவை பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இப்படம் காமெடி கலந்த குடும்ப படமாக உருவாகி வருகிறது.

விரைவில் இப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை கமல்ஹாசன் வெளியிட்டார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )