எதிர்காலத்தில் மருந்துகளைக் குறைந்த விலையில் விநியோகிக்க எதிர்பார்ப்பு !
மருந்துகளின் விலையை முறையாக நடைமுறைப்படுத்தியதன் பின்னர் எதிர்காலத்தில் அவற்றைக் குறைந்த விலையில் விநியோகிப்பதற்கு எதிர்பார்ப்பதாகத் தேசிய ஓளடதங்கள் ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழுவின் தலைவர் விசேட வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
‘தற்போது மருந்து கொள்வனவு செய்வதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது.
இதன்காரணமாக தற்போது மருந்துகளைக் குறைந்த விலையில் விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
எனினும் எதிர்வரும் காலத்தில் மருந்து கொள்வனவு உள்ளிட்ட பிரச்சினைகள் நிவர்த்திக்கப்பட்டு அவற்றைக் குறைந்த விலையில் வழங்குவதற்கு எதிர்பார்க்கின்றோம்’ என தேசிய ஓளடதங்கள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு தலைவர் விசேட வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்துள்ளார்.